என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் கடும் அவதி"
- அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
- பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சென்னை:
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே 45 நிமிட இடைவெளியில் மட்டும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகுதான் வழக்கமாக ரெயில் சேவை ஞாயிறு கால அட்டவணை அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வயதான முதியோர் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதுபற்றி சானடோரியம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஆதங்கத்துடன் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாகவே தாம்பரம்-கடற்கரை ரெயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
பராமரிப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இரவு-பகலாக சரி செய்ய வேண்டியது தெற்கு ரெயில்வேயின் பொறுப்பாகும். ஆனால் இதை தெற்கு ரெயில்வே கடைபிடிப்பதில்லை.
பல மாதங்களாக பகல் நேரத்தில் ரெயில்களை ரத்து செய்கின்றனர். எத்தனை மாதத்துக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதை பொது மக்களுக்கு தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும். இவர்கள் இஷ்டத்துக்கு ரெயில்களை ரத்து செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே பராமரிப்பு பணிகள் எவ்வளவு நடந்து உள்ளது? என்பதை மக்களுக்கு விளக்குவதுடன் இந்த பணிகள் இன்னும் எத்தனை மாதத்துக்கு நடைபெறும் என்பதையும் தெற்கு ரெயில்வே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
- சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே திருப்பதி கார்டன் பகுதி உள்ளது. இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் சாலைகளில் நீர் தேங்கி விடுவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பணியாள ர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையை கடந்து செல்லும் போது மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,
எங்கள் பகுதியில் சாலை குண்டும், குழியமாக இருப்பதால் எங்கள் சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. அவசரத்திற்கு சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது.
இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் இந்த பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
- அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பகுதியில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
இதற்காக ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ராட்சத கிரேன் மூலம் குடிநீர் குழாய் களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் பள்ளங்களை தோண்டி பதிக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.
இதில் தச்சம்பத்து முதல் மேலக்கால் பாலம் வரை உள்ள சாலை ஓரங்களில் பெரிய பள்ளங்களை தோண்டி குடிநீர் குழாய் களை பதித்து விட்டு அதை மூடும்போது முறையாக சாலையை சரி செய்யாமல் விட்டு செல்வதால் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
குறிப்பாக தச்சம்பத்து பகுதியில் சிறிய மழை பெய்தாலே சேரும் சகதியும் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் கார்களில் செல்வோர் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி குடிநீர் குழாய்களை பதித்த பின்பு அதை முறையாக சரி செய்ய வேண்டும் என்றும், பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தாளவாடி பகுதியில் பகல் நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது
- கிராம மக்கள் தலை வலி, காய்ச்சல், சாளியால் கடும் அவதி அடைந்தனர்
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் குளிர் வாட்டியது.
இந்த நிலையில் தாள வாடி பகுதியில் தற்போது மழை குைறந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. அதே போல் காலை 9 மணி வரை பனி மூட்டம் காண ப்படுகிறது. இதனால் விவசாய பணி கள் பாதிக்கபட்டுள்ளது.
தாளவாடி, தலமலை, ஆச னூர், கேர்மாளம், பன க்கள்ளி மற்றும் திம்பம் மலைப்பாதையிலும் பனி மூட்டம் காணப்பட்டது.
கடும் பனி மூட்டத்தால் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி ஊர்ந்து சென்றன. கடும் பனி மூட்டம் காரண மாக கிராம மக்கள் தலை வலி, காய்ச்சல், சாளியால் கடும் அவதி அடைந்தனர்.
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே ஆத்தூர் யூனியனுக்குட்பட்ட ஆத்தூர், சித்தையங்கோட்டை, செம்பட்டி, போடிக்காமன் வாடி, சீவல்சரகு, ஆதிலட்சுமிபுரம், அழகர் நாயக்கன்பட்டி, சித்தரேவு, பாளையங்கோட்டை, கூலம்பட்டி, சேடப்பட்டி, மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் மின்வெட்டு உள்ளது.
இதன்காரணமாக பொதுமக்களும், வியாபாரிகள் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனை, சித்தையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள், அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போர் ஆகியோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், செம்பட்டியில் தான் துணை மின்நிலையம் உள்ளது. இப்படி மின்சாரம் தடைபடுகிறது என்று பகலில் போன் செய்தாலும் அங்கு பணியில் இருப்பவர்கள் போனை எடுப்பதில்லை. அப்படி எடுத்தாலும் வரும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.
கடந்த வாரம் எல்லாம் பள்ளி மாணவ, மாணவிகள் பரீட்சைக்கு படிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். பச்சிளங்குழந்தைகளை வைத்திருப்போர் அவதிப்படுகின்றனர்.
எனவே மாவட்ட மின்சார வாரியம் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்